2047 ஆம் ஆண்டில் இந்தியா பற்றிய தொலைநோக்குப் பார்வை
November 2 , 2023 653 days 655 0
நிதி ஆயோக் அமைப்பானது, 2047 ஆம் ஆண்டில் இந்தியா பற்றிய தொலைநோக்குப் பார்வை (விஷன் இந்தியா@2047) என்ற வரைவு அறிக்கையினை இறுதி செய்து வருகிறது.
இது இந்தியா 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ள நிலையில் இது நடுத்தர வருமானம் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து இந்தியா விடுபட உதவும் ஒரு செயல்திட்டத்தினை அமைக்கும்.
இந்தியா 2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த நாடாக மாறும்.
18,000 முதல் 20,000 டாலர் வரையிலான தனிநபர் வருமானம் என்ற நிலையினை அடைவதை இந்தத் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த இலட்சிய இலக்கு ஆனது இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக நிலை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.