2047ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் ஓக் மரங்கள் திட்டம்
July 14 , 2026 71 days 207 0
இமயமலை ஓக் காடுகளை மீட்டெடுக்கும் நோக்கில் சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் "திட்டம்: 2047- ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் ஓக் மரங்கள் திட்டம்" என்ற முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார்.
அதிக அளவில் உள்ளூர் ஓக் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் நீர் பாதுகாப்பு, பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது சிக்கிம் பர்யவரன் பர்வ் 2026 நிகழ்ச்சியின் போது சிக்கிமின் லக்யாப் காப்புக் காட்டில் தொடங்கப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஓக் காடு மறுசீரமைப்பு கையேட்டினை முதலமைச்சர் வெளியிட்டார் என்பதுடன் மேலும் வன ரோந்து வாகனங்களையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இமயமலை மாநிலமான சிக்கிமில் வனப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில், அதன் புவியியல் பரப்பளவில் கிட்டத்தட்ட 47.33% காடுகளால் சூழப் பட்டுள்ளது.