TNPSC Thervupettagam

2050 ஆம் ஆண்டுக்குள் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மாற உள்ள இந்தியா

September 24 , 2021 1415 days 544 0
  • 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக இந்தியா மாறும் வாய்ப்புள்ளது.
  • ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச வர்த்தகத் துறையினால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டுள்ளது.
  • 2050  ஆம் ஆண்டில் உலகளாவிய இறக்குமதியில் 5.9 சதவீத பங்களிப்புடன் இந்தியா உலகின் 3வது மிகப்பெரிய இறக்குமதி நாடாக மாறும்.
  • சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்த நிலையில் இந்தியா இடம் பெறும்.
  • உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடுகளின் பட்டியலில் 2.8% பங்களிப்புடன் இந்தியா தற்போது 8வது இடத்தில் உள்ளது.
  • உலகளாவிய வர்த்தகக் கண்ணோட்ட அறிக்கையின்படி, இந்தப் பட்டியலில் 2030 ஆம் ஆண்டுக்குள் 3.9% பங்களிப்புடன் இந்திய நாட்டின் நிலை 4வது இடத்திற்கு உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்