ஏகலவ்யா கல்வி முறை அடிப்படையிலான குடியிருப்புப் பள்ளிகளின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக 21 ஆம் நூற்றாண்டிற்கான அனுபவ கற்றல் திட்டம் ஆனது சமீபத்தில் தொடங்கப்பட்டது.
இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் ESTS நிறுவனம் ஆகியவற்றினால் TATA அறக்கட்டளைகள், TISS மற்றும் MGIS ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தொடங்கப்பட்டது.
இது ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் ஆகியோருக்கான இணையவழித் திட்டமாகும்.
இதில் அவர்களுக்கு நிகழ்நேர அனுபவங்களுக்கு ஏற்ப வகுப்பறைக் கற்றல் முறையை மாற்றியமைக்கப் பயிற்றுவிக்கப் படும்.