இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா உள்ளிட்ட இருபத்தொரு உச்ச நீதி மன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் தங்கள் நிதிச் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் 33 நீதிபதிகளில் 21 பேரின் சொத்துக்களின் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
ஏப்ரல் 01 ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளின் ஒருமித்தத் தீர்மானத்தைத் தொடர்ந்து சொத்துக்களின் தகவல் குறித்த இப்பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளைப் போலல்லாமல், இந்த நீதிபதிகள் தங்கள் சொத்துக்கள் குறித்தத் தகவல்களை பொதுவெளிக் களத்தில் கட்டாயமாக வெளியிட வேண்டியதில்லை.
2019 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு அமர்வானது, நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த தகவல்களை வெளியிடச் செய்வது என்பது பொது நலன் சார்ந்ததாக இருந்தால், அது "நீதிபதிகளின் தனிப்பட்டத் தகவல்கள் மற்றும் தனியுரிமைக்கான ஒரு உரிமையை பாதிக்காது" என்று தீர்ப்பளித்தது.