இந்தியாவில், இதுவரை கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலத்தில் அமைக்கப்படும் (பசுந்தடம்) 21 விமான நிலையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் "கொள்கைசார்" ஒப்புதலை அளித்துள்ளது.
இதுவரை கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலத்தில் அமைக்கப் படும் இந்த 21 விமான நிலையங்களில், ஒன்பது விமான நிலையங்கள் ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் என்பது எந்தவொரு மேம்பாட்டு நடவடிக்கைகளும் இல்லாத நிலத்தில், கடந்த காலத்தில் எந்தவொருப் பணியும் செய்யப்படாத இடத்தில் புதிதாகக் கட்டப்படும் ஒரு விமான நிலையமாகும்.
தற்போதுள்ள விமான நிலையங்களில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த விமான நிலையங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, இது நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியில், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த சிறப்பு கவனம் செலுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.