நுகர்வோர் விலைக் குறியீட்டால் (CPI) அளவிடப்படும் இந்தியாவின் சில்லறைப் பண வீக்கம், 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 2.10% ஆகக் குறைந்துள்ளது, இது 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏற்பட்ட மிக குறைந்த அளவு ஆகும்.
இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் 2.82% இலிருந்து தீவிர சரிவைக் குறிக்கிறது, இது நேர்மறையான அடிப்படை விளைவுகள் மற்றும் முக்கிய உணவு வகைகளில் பண வீக்கத்தைக் குறைத்ததன் மூலம் ஏற்பட்டுள்ளது.
நுகர்வோர் உணவு விலைக் குறியீடானது (CFPI) 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடச் செய்யும் போது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு ஆண்டு -1.06% (தற்காலிக மதிப்பு) வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
கிராமப்புற CFPI அடிப்படையிலான உணவுப் பணவீக்கம் -0.92% (தற்காலிக மதிப்பு) ஆகவும், நகர்ப்புற உணவுப் பணவீக்கம் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் -1.22% (தற்காலிக மதிப்பு) ஆகவும் இருந்தது.