2100 ஆம் ஆண்டளவில் உலகளாவிய 'குழந்தை பிறப்பு வீத சரிவு'
November 15 , 2025 13 hrs 0 min 21 0
ஒரு புதிய ஆய்வு, உலக நாடுகள் விரைவில் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் எதிர்கொள்ளும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
2050 ஆம் ஆண்டில், 204 (76%) நாடுகளில் 155 நாடுகள் கருவுறுதல் மாற்றீடு அளவை விடக் குறைவாகவே இருக்கும்.
2100 ஆம் ஆண்டில் 97 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகள் கருவுறுதல் விகிதங்களை தேவையான சதவீதத்தை விடக் குறைவாகக் கொண்டிருக்கும்.
கடந்த 70 ஆண்டுகளில் உலகளாவிய TFR விகிதம் பாதிக்கும் குறைவாகக் குறைந்து உள்ளது என்ற நிலையில் 1950 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு ஐந்து குழந்தைகளாக இருந்த இது 2021 ஆம் ஆண்டில் 2.2 குழந்தைகளாகக் குறைந்துள்ளது.
உலகின் கிட்டத்தட்ட பாதி நாடுகள், 204 நாடுகளுள் 110 நாடுகள் 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு 2.1 பிறப்புகள் என்ற மக்கள்தொகை மாற்றீட்டு அளவை விடக் குறைவாக கொண்டுள்ளன.
ஒவ்வொரு பெண்ணுக்கும் 1.1 குழந்தைக்கும் குறைவான விகிதத்துடன், தென் கொரியா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் பாதகமான விகிதம் பதிவாகியுள்ளது.
சாட் நாட்டில், ஏழு குழந்தை பிறப்புகள் என்ற TFR உலகிலேயே மிக உயர்ந்ததாக உள்ளது.