தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் பேரரசர் கின் ஷி ஹுவாங்கால் கட்டப் பட்ட 900 கி.மீ நெடுஞ்சாலையான 2,200 ஆண்டுகள் பழமையான கின் நேரடிச் சாலையைக் கண்டறிந்துள்ளனர்.
சியான்யாங்கிலிருந்து ஜியுயுவான் வரை செல்கின்ற இந்த சாலை கிமு 212 மற்றும் கிமு 207 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஜெனரல் மெங் தியனின் மேற்பார்வையின் கீழ் கட்டமைக்கப்பட்டது.
சியாங்னு நாடோடிகளுக்கு எதிரான விரைவான வீரர்களின் நகர்வுகளுக்காக என்று வடிவமைக்கப் பட்ட இந்த சாலை திமித்த மண், நிரப்பப்பட்ட பள்ளத்தாக்குகள் மற்றும் நேரான அகழிகளுடன் 40-60 மீட்டர் அகலமுள்ள ஒரு சமமான பாதையாக உருவாக்கப் பட்டது.
ஷான்சியின் யூலினில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகள், இறுக்கப்பட்ட சாலைப் படுகைகள், வலுவூட்டப்பட்ட சரிவுகள் மற்றும் அதிகப் பயன்பாட்டிற்கான சான்றுகளைக் கொண்ட 13 கி.மீ நீளமுள்ள ஒரு பகுதியை வெளிப்படுத்தின.
அருகிலுள்ள ரிலே நிலையத்தில் கின்-டு-ஹான் மட்பாண்டங்கள் இருந்தன, இது அதன் நீண்டகால மூலோபாய மற்றும் வணிக முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துகிறது.
"உலக நெடுஞ்சாலைகளின் மூதாதையர்" என்று கருதப்படுகின்ற இந்த நெடுஞ்சாலை அளவு மற்றும் பாதுகாப்புச் செயல்பாட்டில் சீனப் பெருஞ்சுவருக்கு அடுத்தபடியாக உள்ளது.