22வது ஆசியான் (ASEAN) - இந்தியா உச்சி மாநாடு ஆனது கோலாலம்பூரில் நடைபெற்றது.
தைமோர்-லெஸ்டே ஆசியான் அமைப்பின் 11வது உறுப்பினராகி, ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் முதல் முறையாக அதன் முழு உறுப்பினராகக் கலந்து கொண்டது.
ASEAN நாடுகளின் ஒற்றுமை, இந்தோ-பசிபிக் மீதான ASEAN அமைப்பின் கண்ணோட்டம் மற்றும் ASEAN சமூக தொலைநோக்குக் கொள்கை 2045 ஆகியவற்றிற்கான ஆதரவை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியது.
ASEAN - இந்தியா செயல் திட்டம் (2026–2030), ASEAN - இந்தியா கடல்சார் ஒத்துழைப்பு ஆண்டு 2026, மற்றும் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தென்கிழக்கு ஆசிய ஆய்வுகளுக்கான மையம் உள்ளிட்ட பல முன்னெடுப்புகள் முன்மொழியப்பட்டன.
1967 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ASEAN, 2025 ஆம் ஆண்டின் தலைமை பொறுப்பில் மலேசியாவினைக் கொண்டு, தற்போது 11 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது, 2026 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் அந்தப் பொறுப்பினை ஏற்க உள்ளது.