24 மணி நேர கைது விதி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
November 11 , 2026 5 days 110 0
கைது செய்யப்பட்ட ஒருவரை நடுவர் முன் ஆஜர்படுத்துவதற்கான 24 மணி நேரக் கால வரம்பு என்பது, உண்மையில் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட நேரத்திலிருந்தே தொடங்குகிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அரசியலமைப்புப் சரத்து 22(2) இன் கீழ், காவலில் வைக்கப்பட்ட நபர், தேவையான பயண நேரத்தைத் தவிர்த்து, 24 மணி நேரத்திற்குள் நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும்.
ஒரு நபரின் சுதந்திரம் உண்மையில் எப்போது உடல்ரீதியாகக் கட்டுப்படுத்தப்படுகிறதோ அப்போதே இந்த 24 மணி நேரக் காலம் தொடங்குகிறது; பின்னர் செய்யப்படும் முறையான கைது நேரத்தைக் கொண்டு காலக்கெடுவை தாமதப்படுத்தப் பயன்படுத்தக் கூடாது.
நடுவர்கள் தடுப்புக்காவலின் உண்மையான தேதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்ய வேண்டும், மேலும் காவலில் வைக்கப்பட்ட நேரம் அரசியலமைப்பு வரம்பை மீறினால் உடனடியாக விடுவிக்கவும் உத்தரவிடலாம்.
திரிபுராவில் போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் (NDPS) சட்டத்தின் கீழ் நான்கு பேர் தடுத்து வைக்கப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; உச்ச நீதிமன்றம் அவர்களை விடுவிக்க உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பை மாநில மற்றும் ஒன்றியப் பிரதேச காவல் துறைத் தலைவர்கள், உயர் நீதிமன்றப் பதிவாளர்கள் மற்றும் மாநில நீதித்துறை அகாடமிகளுக்குச் சுற்றுக்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டது.