24 x 7 பெண்களுக்கான உதவி மைய எண் “181” - தமிழ்நாடு
December 13 , 2018 2424 days 849 0
குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றை எதிர்கொள்ளும் பெண்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச உதவி மைய எண்ணான “181” என்ற எண்ணை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது.
இந்த சேவை மூலம் அவர்கள் காவல்துறை உதவி, சட்ட உதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்ட மருத்துவ உதவிகள் ஆகியவற்றைப் பெற முடியும்.
இச்சேவையை வாரத்தின் அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் அவர்கள் பெற முடியும். மேலும் இச்சேவையைப் பயன்படுத்தி பெண்கள் தங்களுக்கு பயன்படக்கூடிய நலத் திட்டங்கள் குறித்த தகவல்களையும் பெற முடியும்.