மாசுபடுத்தும் நடவடிக்கைகள் பற்றி கண்காணித்து, அறிக்கை தயார் செய்து அதன் மீது துரிதமான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் டெல்லியில் 2018ம் ஆண்டு நவம்பர் 1 முதல் 10 வரை 10 நாட்கள் கால அளவு கொண்ட ஒரு தீவிரமான தூய காற்றுக்கானப் பிரச்சாரம் மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டது.
அமைச்சரால் 52 அணிகள் ஒரே சமயத்தில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன. இந்த அணிகள் டெல்லியின் வெவ்வேறு பகுதிகளுக்கும் அதனைச் சுற்றியுள்ள பரிதாபாத், குருகிராம், காஜியாபாத் மற்றும் நொய்டா போன்ற நகரங்களுக்கும் வருகை புரியும்.
இந்த அணி பின்வருவோரை உள்ளடக்கியதாகும்.
அணித் தலைவராக உள்ளூர் துணைக் கோட்ட அலுவலர்
மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள்
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள்
டெல்லி மாநகராட்சி
டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
டெல்லி இதைப் போல 44 அணிகளைக் கொண்டதாகும்.
தேசிய தலைநகரப் பகுதியில் உள்ள குருகிராம், நொய்டா, பரிதாபாத் மற்றும் காஜியாபாத் போன்ற நகரங்கள் தலா இரண்டு அணிகளைக் கொண்டிருக்கும்.