25 நாடுகளில் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கூட்டு நுழைவுத் தேர்வு
May 24 , 2022 1168 days 428 0
இந்திய அரசாங்கம் இந்தப் பொறியியல் நுழைவுத் தேர்வினை 25 நாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதால், இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் கூட்டு நுழைவுத் தேர்வானது, உலகளவில் நடைபெற உள்ளது.
இத்தேர்வானது கடந்த ஆண்டு கோலாலம்பூர் மற்றும் லாகோஸ் ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.
தற்போது, இந்தத் தேர்வுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சீனா, நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உட்பட பல நாடுகளில் நடத்தப்பட உள்ளது.
முன்னதாக இந்திய அரசின் ஒத்துழைப்புடன் 12 நாடுகளில் இந்தத் தேர்வுகள் நடத்தப் பட்டன.