TNPSC Thervupettagam

25 மிகவும் அருகி வரும் முதனி தொகுதி விலங்கினங்கள்

May 16 , 2025 5 days 55 0
  • 'Primates in Peril: The World’s 25 Most Endangered Primates 2023–2025' என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது IUCN, Bristol Zoological Society, மற்றும் the Conservation International ஆகியோரால் வெளியிடப் பட்டது.
  • உலகின் மிகவும் அருகி வரும் 25 முதனி தொகுதி விலங்கினங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆறு இனங்கள், மடகாஸ்கரில் இருந்து நான்கு, ஆசியாவிலிருந்து ஒன்பது மற்றும் நியோட்ரோபிக்ஸ் (தென் அமெரிக்கா) பகுதியிலிருந்து ஆறு என்ற அளவில் இதில் அடங்கும்.
  • இந்த 25 இனங்களில், இந்தோனேசியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்த்து நான்கு இனங்களையும், சீனா, நைஜீரியா மற்றும் வியட்நாம் ஆகியவை மூன்று  இனங்களையும், பிரேசில், மலேசியா மற்றும் தான்சானியா ஆகியவை இரண்டு இனங்களையும் கொண்டுள்ளன.
  • பெனின், பொலிவியா, புருனே, கேமரூன், கொலம்பியா, கோஸ்டாரிகா, காங்கோ ஜனநாயக குடியரசு, லாவோஸ் PDR, மியான்மர், பனாமா, பெரு, சிங்கப்பூர், டோகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் தலா ஒரு இனமும் உள்ளன.
  • வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் காணப்படும் இரண்டு முதனி தொகுதி விலங்கினங்கள் (ஃபைரின் இலைக் குரங்கு மற்றும் மேற்கத்திய ஹூலாக் கிப்பன்) இறுதிப் பட்டியலுக்கு பரிசீலிக்கப்பட்ட இனங்களில் அடங்கும்.
  • ஃபைரின் இலைக் குரங்கு (டிராச்சிபிதேகஸ் ஃபைரி), மிகக் குறைவாக ஆய்வு செய்யப் பட்ட ஆசிய மந்தி இனங்கள் அல்லது இலை உண்ணும் குரங்குகளில் ஒன்றாகும்.
  • இது கிழக்கு வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு மியான்மர் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படுவதாக சமீபத்தில் வரையறுக்கப்பட்டது.
  • மேற்கத்திய ஹூலாக் கிப்பன் (ஹூலாக் ஹூலாக்), 20 வகையான கிப்பன்களில் ஒன்றாகும், மேலும் இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்