'Primates in Peril: The World’s 25 Most Endangered Primates 2023–2025' என்ற தலைப்பிலான அறிக்கையானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது IUCN, Bristol Zoological Society, மற்றும் the Conservation International ஆகியோரால் வெளியிடப் பட்டது.
உலகின் மிகவும் அருகி வரும் 25 முதனி தொகுதி விலங்கினங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து ஆறு இனங்கள், மடகாஸ்கரில் இருந்து நான்கு, ஆசியாவிலிருந்து ஒன்பது மற்றும் நியோட்ரோபிக்ஸ் (தென் அமெரிக்கா) பகுதியிலிருந்து ஆறு என்ற அளவில் இதில் அடங்கும்.
இந்த 25 இனங்களில், இந்தோனேசியா மற்றும் மடகாஸ்கர் ஆகிய இரண்டு பகுதிகளும் சேர்த்து நான்கு இனங்களையும், சீனா, நைஜீரியா மற்றும் வியட்நாம் ஆகியவை மூன்று இனங்களையும், பிரேசில், மலேசியா மற்றும் தான்சானியா ஆகியவை இரண்டு இனங்களையும் கொண்டுள்ளன.
பெனின், பொலிவியா, புருனே, கேமரூன், கொலம்பியா, கோஸ்டாரிகா, காங்கோ ஜனநாயக குடியரசு, லாவோஸ் PDR, மியான்மர், பனாமா, பெரு, சிங்கப்பூர், டோகோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளில் தலா ஒரு இனமும் உள்ளன.
வடகிழக்கு இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் காணப்படும் இரண்டு முதனி தொகுதி விலங்கினங்கள் (ஃபைரின் இலைக் குரங்கு மற்றும் மேற்கத்திய ஹூலாக் கிப்பன்) இறுதிப் பட்டியலுக்கு பரிசீலிக்கப்பட்ட இனங்களில் அடங்கும்.
ஃபைரின் இலைக் குரங்கு (டிராச்சிபிதேகஸ் ஃபைரி), மிகக் குறைவாக ஆய்வு செய்யப் பட்ட ஆசிய மந்தி இனங்கள் அல்லது இலை உண்ணும் குரங்குகளில் ஒன்றாகும்.
இது கிழக்கு வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு மியான்மர் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படுவதாக சமீபத்தில் வரையறுக்கப்பட்டது.
மேற்கத்திய ஹூலாக் கிப்பன் (ஹூலாக் ஹூலாக்), 20 வகையான கிப்பன்களில் ஒன்றாகும், மேலும் இது IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது.