ஒரு கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகளை நடைமுறைச் சோதனைகளில் ஈடுபடுத்தும் சுமார் 10,000 அடல் மேம்படுத்தும் ஆய்வகங்கள் தற்போது இந்தியா முழுவதும் செயலில் உள்ளன.
அவற்றின் வெற்றியால் ஊக்கம் பெற்ற அரசு, நாடு முழுவதும் 25,000 புதிய அடல் மேம்படுத்தும் ஆய்வகங்களை நிறுவ உள்ளது.
இந்த ஆய்வகங்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளின் கல்வியை மேம்படுத்துவதையும் மாணாக்கர்களிடையே ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த STEM சூழல் அமைப்பைப் பூர்த்தி செய்ய ஏழு இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் மற்றும் பதினாறு இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் உட்பட நூற்றுக்கணக்கான புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன.