TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2018 2827 days 1166 0
  • ஐசிசி மகளிர் உலக டி20 XI அணியின் தலைவராக ஐசிசி தேர்வுக் குழுவினரால் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிரித் மந்தனா மற்றும் இடது கை சுழற்பந்து வீச்சாளரான பூனம் யாதவ் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள மற்ற வீரர்களாவர்.
  • உலகின் முதலாவது நிலத்தடி மட்டத்திற்கு கீழ் அமைந்த ஆடம்பர தங்கும் விடுதியான இண்டர்கான்டினென்டல் ஷாங்காய் வொண்டர்லேண்ட் விடுதி ஆனது சீனாவின் ஷாங்காய் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாங்கியாங் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா-ரஷ்யா இடையேயான முதலாவது யுக்தி முறையிலான பொருளாதாரப் பேச்சுவார்த்தை ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடைபெற்றது. இந்தியக் குழு நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாராலும் ரஷ்யக் குழு ரஷ்யாவின் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் மாக்ஸிம் ஒரேஷ்கின் என்பவராலும் தலைமை தாங்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்