TNPSC Thervupettagam

2,600 ஆண்டுகள் பழமையான எட்ருஸ்கன் கல்லறை

March 15 , 2026 14 hrs 0 min 26 0
  • மத்திய இத்தாலியில் உள்ள சான் கியுலியானோ தொல்பொருள் தளத்தில், 2,600 ஆண்டுகள் பழமையான, பாதுகாத்து வைக்கப்பட்ட எட்ருஸ்கன் கல்லறை ஒன்றைத் தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்தக் கல்லறை கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் பல நூற்றாண்டுகளாக எவ்வித பாதிப்பும் இன்றி அப்படியே இருந்துள்ளது.
  • அங்குள்ள கல் படுக்கைகளில் வைக்கப்பட்டிருந்த நான்கு நபர்களின் உடல் எச்சங்கள் இதில் கண்டெடுக்கப்பட்டன.
  • மட்பாண்டங்கள், இரும்பு ஆயுதங்கள், வெண்கல ஆபரணங்கள் மற்றும் வெள்ளி நகைகள் என 100-க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அங்கு கிடைத்துள்ளன.
  • இந்தக் கண்டுபிடிப்பு எட்ருஸ்கன் நாகரிகத்தின் அடக்க முறைகள் மற்றும் சமூக வாழ்க்கை பற்றிய அரிய தகவல்களை வழங்குகிறது.
  • எட்ருஸ்கன் நாகரிகம் கிமு 8 மற்றும் 6 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மத்திய இத்தாலியில் செழித்தோங்கியது மற்றும் ஆரம்பகால ரோமானியக் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்