நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறை தீர்வுத் துறையானது (DARPG - Department of Administrative Reforms & Public Grievances) 26வது தேசிய இணைய வழி ஆளுகைச் சேவை வழங்கல் மதிப்பீட்டின் (National e-Governance Service Delivery Assessment - NeSDA) முன்னேற்ற அறிக்கையை வெளியிட்டது.
இது இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் (UTs) முழுவதுமான இணைய வழி ஆளுகைச் சேவை வழங்கலின் நிலையை விவரிக்கிறது.
இந்த அறிக்கையானது எண்ணிம வழி நிர்வாகம் மற்றும் குடிமக்கள் சேவை அணுகலில் பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
பதினொரு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் கட்டாய இணைய வழியான ஆளுகை சேவை வழங்கலில் 90% நிறைவு நிலையினைத் தாண்டியுள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்கள் 100% நிறைவு நிலையினை எட்டியுள்ளன.
அசாம், ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, கேரளா, ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவை சேவா சேது, e-UNNAT, சேவா சிந்து, e-Sevanam, ஒடிசா ஒன் மற்றும் அபுனி சர்க்கார் போன்ற இணைய தளங்கள் மூலம் அனைத்துச் சேவைகளையும் வழங்குகின்றன.
மகாராஷ்டிராவின் சேவை உரிமை ஆணையம் ஆனது சேவை வழங்கல் மற்றும் குடி மக்கள் திருப்தியை மேம்படுத்துவதற்கானப் பெரும் மாறுதல் மிக்க நடவடிக்கைகளை செயல்படுத்தி யுள்ளது.
திரிபுராவின் SWAAGAT தளமானது ஒரு சிறந்த நடைமுறை சார்ந்த எடுத்துக்காட்டாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
சூரத் மற்றும் சிம்லாவில் உள்ள நகரத்தின் இணைய தளங்கள் நகராட்சி மட்டத்தில் எண்ணிமமயமாக்கலின் தாக்கத்தை நிரூபிக்கின்றன.
இந்த அறிக்கையில் வட கிழக்கு மற்றும் மலைப்பாங்கான மாநிலங்களுக்கு என்று பயன்படுத்தப் படும் AAKLAN என்ற மதிப்பீட்டுக் கருவியின் முடிவுகள் அடங்கும்.