2வது சர்வதேச பாரத் 6G கருத்தரங்கு புது டெல்லியில் நடைபெற்றது.
இது 9வது இந்தியக் கைபேசி மாநாட்டுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வைத் தொலைத்தொடர்புத் துறை மற்றும் இந்தியக் கைபேசி இணைப்பு சேவை வழங்குநர் சங்கம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
எதிர்காலத் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களில் சர்வதேச ஒத்துழைப்புக்கான முக்கிய தளமாக இந்தக் கருத்தரங்கு செயல்படுகிறது.
இக்குழு, அடிப்படை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப செயல்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து விவாதித்தது.