3வது அமெரிக்க – இந்திய உத்திசார் பங்காளர் மன்ற (USISPF) மாநாடு
September 10 , 2020 1891 days 778 0
இது ”அமெரிக்க-இந்தியப் பயணத்தின் புதிய சவால்கள்” என்ற கருத்துருவுடன் 5 நாட்கள் நடத்தப்படும் ஒரு மாநாடாகும்.
USISPF (US India Strategic Partnership Forum) என்பது ஓர் இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.
இது இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றிற்கிடையே நட்பை ஏற்படுத்துவதற்காகப் பணியாற்றுகின்றது. இது 2017 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது.
USISPF ஆனது கொள்கைக் கருத்தாக்கத்தின் மூலம் இந்த 2 நாடுகளுக்கிடையே வலுவான மற்றும் மாறி வரும் உறவை உருவாக்கும் ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டு வருகின்றது.