3வது ஆர்க்டிக் அறிவியல் துறை அமைச்சர்கள் சந்திப்பு
May 13 , 2021
1557 days
684
- 3வது ஆர்க்டிக் அறிவியல்துறை அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா பங்கேற்றதாக புவி அறிவியல் துறை அமைச்சகமானது சமீபத்தில் அறிவித்தது.
- இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் அவர்கள் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார்.
- 2021 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “Knowledge for a Sustainable Arctic” (ஒரு நீடித்த ஆர்க்டிக் பகுதிக்கான அறிவுக் களஞ்சியம்) என்பதாகும்.
- முதல் இரண்டு ஆர்க்டிக் அறிவியல்துறை அமைச்சர்கள் சந்திப்பானது 2016 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலும் 2018 ஆம் ஆண்டில் ஜெர்மனியிலும் நடைபெற்றது.
- இந்த ஆண்டு நடைபெற்ற இந்த சந்திப்பினை ஜப்பான் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் ஏற்பாடு செய்தன.
- இந்த சந்திப்பானது ஆசியாவில் மேற்கொள்ளப் படுவது இதுவே முதல்முறையாகும்.
- 2013 ஆம் ஆண்டு முதல் இந்திய நாடானது ஆர்க்டிக் மன்றத்தில் ஒரு “பார்வையாளர் நாடாக” உள்ளது.

Post Views:
684