2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (H1) நிதி சார் தொழில்நுட்ப புத்தொழில் நிறுவன நிதியளிப்பில் இந்தியா உலகளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இந்தத் துறையானது 889 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியது என்பதோடு இது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் திரட்டப்பட்ட 936 மில்லியனிலிருந்து 5 சதவீதமும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 1.2 பில்லியன் டாலரை விட 26 சதவீதமும் குறைவாகும்.
மொத்த நிதியில் பெங்களூரு 55% உடன் முன்னிலை வகித்தது, அதைத் தொடர்ந்து 14 சதவீதப் பங்குடன் மும்பை இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஆக்செல் நிறுவனம் ஆனது 34 ஒப்பந்தங்களுடன் ஒட்டுமொத்த முதலீட்டுச் சுற்றுகளில் முன்னிலை வகித்தது; ப்ளூம் வென்ச்சர்ஸ் அதன் தொகுப்பு முதலீட்டில் 7 புதிய புத்தொழில் நிறுவனங்களை சேர்த்தது.