TNPSC Thervupettagam

3வது தேசிய நீர் விருதுகள்

April 9 , 2022 1171 days 649 0
  • இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றாவது தேசிய நீர் விருதுகளை வழங்கி உள்ளார்.
  • நீர்வள மேலாண்மைத் துறையில் முன்மாதிரியான ஒரு பணிக்காக இது வழங்கப் படுகிறது.
  • மேலும் அவர் ‘ஜல் சக்தி அபியான்: 2022 ஆம் ஆண்டிற்கான மழை நீரைச் சேமியுங்கள் பிரச்சாரம்’  என்ற பிரச்சாரத்தினைப் புது தில்லியில் தொடங்கினார்.
  • உத்தரப் பிரதேசம் முதல் பரிசையும், அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசினையும் பெற்றுள்ளன.
  • தமிழ்நாட்டின் மதுரை மாநகராட்சி, "சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு" பிரிவில் விருது பெற்ற மாநகராட்சிகளுள் ஒன்றாகும்.
  • செங்கல்பட்டு மாவட்டத்தின் வெள்ளப் புத்தூர் ஊராட்சி தமிழ்நாடு "சிறந்த கிராம ஊராட்சி" என்ற பிரிவில் விருது பெற்ற ஊராட்சிகளுள் ஒன்றாகும்.
  • புதுச்சேரி காவேரிப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர் அமலோற்பவம் லூர்து அகாடமி, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அமிட்டி இன்டர்நேஷனல் பள்ளி ஆகியன சிறந்தப் பள்ளி என்ற பிரிவில் விருதுகளை வென்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்