3 உறுப்பினர்கள் கொண்ட நிபுணர் குழு – பெகாசூஸ் உளவு மென்பொருள்
November 1 , 2021 1386 days 514 0
பெகாசூஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்றோரை இலக்காக வைத்து கண்காணித்ததினைக் குறித்து ஆய்வு செய்வதற்காக 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்ந்து ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழுவிடம் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி R.V. ரவீந்திரன் தலைமையிலான இந்தக் குழுவின் மற்ற இரு உறுப்பினர்கள் 1976 ஆம் ஆண்டின் பணித் தொகுப்பைச் சேர்ந்த இந்தியக் காவல் பணி அதிகாரி அசோக் ஜோசி மற்றும் டாக்டர் சந்தீப் ஓபராய் ஆகியோர் ஆவர்.