TNPSC Thervupettagam

3 வர்த்தக அளவுருக்கள்

September 15 , 2022 1007 days 431 0
  • அமெரிக்கா தலைமையிலான இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் அமைச்சர்கள் கூட்டமானது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சமீபத்தில் நிறைவடைந்தது.
  • இந்திய நாடானது இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பின் மற்ற மூன்று அளவுருக்களுடன் இசைந்த நிலையில், வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் இருந்து மட்டும் விலகி இருக்க இந்தியா முடிவு செய்ததுள்ளது.
  • இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பானது வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், தூய ஆற்றல் மற்றும் நியாயமானப் பொருளாதாரம் ஆகிய நான்கு அளவுருக்களை அடிப்படையாகக் கொண்டது.
  • வர்த்தகம் தொடர்பான கூட்டுப் பிரகடனத்திற்கு இந்தியா தற்போது உடன்படவில்லை.
  • சுற்றுச்சூழல், தொழிலாளர், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் பொதுக் கொள்முதல் ஆகியவற்றில் தேவைப்படும் உறுதிப்பாடுகள் மீதான கவலைகள் இதற்குக் காரணம் ஆகும்.
  • இந்திய-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பில் உலக நாடுகளின் 40 சதவீதத்திற்கும் மேலான பொருளாதாரங்கள் பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன.
  • இந்திய-பசிபிக் பிராந்தியமானது உலக மக்கள்தொகையில் பாதியளவு மற்றும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்திற்கும் அதிகமான அளவினை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்