உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது, "3 by 35" முன்னெடுப்பினைத் தொடங்கி உள்ளது.
பல்வேறு சுகாதார வரிகள் மூலம் 2035 ஆம் ஆண்டிற்குள் புகையிலை, மதுபானம் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்கள் மீதான உண்மையான விலைகளை குறைந்தது 50 சதவீதம் உயர்த்துமாறு உலக நாடுகளை வலியுறுத்துகிறது.
நாள்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தவும், முக்கியப் பொது வருவாயை ஈட்டவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
WHOவின் இந்தத் தரவுகளின் படி, புகையிலை, மதுபானம் மற்றும் சர்க்கரை நிறைந்த பானங்களின் நுகர்வு தொற்றாத நோய்களின் பரவலைத் தூண்டுகிறது.
இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட NCD நோய்கள் உலகளவில் ஏற்படும் அனைத்து உயிரிழப்புகளிலும் சுமார் 75 சதவீதத்திற்கும் மிக அதிகமாகப் பங்களிக்கின்றன.