TNPSC Thervupettagam

3 தலைமைத் திட்டங்கள்

March 11 , 2021 1615 days 686 0
  • மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது 3 தலைமைத் திட்டங்களின் கீழ் முக்கியமான திட்டங்களை வகைப்படுத்தியுள்ளது.
  • இந்த அமைச்சகமானது சக்தித் திட்டம், போஷான் 2.0 திட்டம், வாத்சல்யா திட்டம் ஆகிய 3 தலைமைத் திட்டங்களின் கீழ் தனது அனைத்து முக்கியமான திட்டங்களையும் வகைப்படுத்த முடிவு செய்துள்ளது.
  • போஷான் 2.0 என்ற திட்டமானது ஊட்டச்சத்துப் பொருட்கள், வரம்புகள், விநியோகம் மற்றும் முடிவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் மற்றும் நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
  • வாத்சல்யா திட்டமானது நாடு முழுவதும் குழந்தை நலப் பணிகள் மற்றும் குழந்தைப் பாதுகாப்புப் பணிகளை மேற்பார்வையிட உள்ளது.
  • சக்தித் திட்டத்தின் கீழ் உள்ளடங்கியுள்ள திட்டங்கள் பின்வருமாறு
    • ஒற்றைத் தகவல் மையம்
    • மகிளா காவல் துறைத் தன்னார்வலர்
    • பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ
    • பெண்கள் உதவி எண்
    • பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்