3 நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத நகரங்கள்
April 4 , 2023 823 days 390 0
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், இந்தியாவின் 1000 நகரங்கள் 3 நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத நகரங்களாக மாற வேண்டும் என்ற ஒரு இலக்கினை நிர்ணயித்துள்ளன.
குப்பைகள் இல்லாத நகரங்கள் (GFC) நட்சத்திர மதிப்பீட்டு நெறிமுறையானது 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப் பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகபட்சத் தர மதிப்பீடு என்பது 7-நட்சத்திரத் தரம் பெற்ற குப்பைகள் இல்லாத ஒரு நகரம் என்ற நிலையில் இந்தூர் நகரம் இந்தத் தரத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் 2014 ஆம் ஆண்டில் 17% ஆக இருந்த கழிவு மறுசுழற்சி அளவானது இன்று நான்கு மடங்கு அதிகரித்து 75% ஆக அதிகரித்துள்ளது.