மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் 3 புதிய தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலங்களை (NIMZ - National Investment and Manufacturing Zone) அமைப்பதற்காக தனது இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இந்த 3 புதிய NIMZகள் பின்வரும் இடங்களில் அமைக்கப்படவிருக்கின்றன.
கலிங்கா நகர், ஒடிசாவின் ஜஜப்பூர் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டம்
தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டம் (முன்னதாக மேடக் மாவட்டம்).
NIMZ
NIMZ-கள் என்பது 2011 ஆம் ஆண்டின் தேசிய உற்பத்திக் கொள்கையின் முக்கியக் கூறுகளில் ஒன்றாகும்.
இவை உலகத் தரத்திலான உற்பத்தி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தேவையான சூழல் அமைப்புடன் மேம்படுத்தப்பட்ட மிகப் பெரிய நிலப் பரப்புப் பகுதியில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது மாநிலங்களுடன் இணைந்து தொழிற்துறை வளர்ச்சியை மேற்கொள்ளுதல் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றது.