பனாரஸ் இந்து பல்கலைக்கழகமானது (BHU) உருவாக்கிய மூன்று பயிர் வகைகள் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளன / அறிமுகப் படுத்தப்பட்டன.
இவற்றில் இரண்டு வகையான அரிசி வகைகள் மற்றும் ஒரு வகை கடுகு ஆகியவை அடங்கும்.
மாளவியா மணிலா சிஞ்சித் தான்-1 ஆனது BHU மற்றும் IRRI ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்டது.
இந்த வகையானது குறுகிய காலத்தில் (115 முதல் 120 நாட்கள்) முதிர்ச்சியடைந்து, ஒரு ஹெக்டேருக்கு 55 முதல் 60 குவிண்டால் வரை மிக அதிக மகசூலை அளிக்கிறது.
இதில் மாள்வியா தான் 105 துணை-1 அரிசி வகையானது முந்தைய மாள்வியா தான் 105 வகையின் ஒரு மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
மாள்வியா நிதி எனும் கடுகு வகையானது 125 முதல் 130 நாட்களில் முதிர்ச்சியடைந்து, ஒரு ஹெக்டேருக்கு என சராசரியாக 20 குவிண்டால் மகசூல் அளிக்கிறது.