சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஆனது ஷாங்க் ஏர், அல் ஹிந்த் ஏர் மற்றும் ஃப்ளைஎக்ஸ்பிரஸ் ஆகியவற்றுக்கு தடையில்லாச் சான்றிதழ்களை (NOC) வழங்கியது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாங்க் ஏர், நொய்டா சர்வதேச விமான நிலையத்திலிருந்து தன் சேவைகளை வழங்கி, நிலை 1 மற்றும் நிலை 2 நகரங்களை இணைக்கத் திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள அல் ஹிந்த் ஏர், ATR 72-600 விமானங்களுடன் பிராந்தியப் பயணிகள் விமான நிறுவனமாகத் தொடங்கவும், பின்னர் சர்வதேச அளவில் விரிவுபடுத்தவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள ஃப்ளைஎக்ஸ்பிரஸ், நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது மற்றும் UDAN (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்) போன்ற அரசு திட்டங்களையும் பயன்படுத்துகிறது.
செயல்பாட்டு மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்திற்காக விமான நிறுவனங்கள் பொது விமானப் போக்குவரத்து அமைச்சகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.
இந்த முன்னெடுப்பு ஆனது, பிராந்திய இணைப்பை அதிகரிப்பதையும் உள்நாட்டு விமானப் பயணத்தை மலிவு விலையில் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.