3 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2020
December 3 , 2019 2111 days 1016 0
மத்திய விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (KIYG - Khelo India Youth Games) 3வது பதிப்பை அசாமின் குவஹாத்தியில் தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் ஜனவரி 22 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
தொடக்க விழாவின் போது இந்த விளையாட்டுப் போட்டிகளின் 3வது பதிப்பின் கலப்பு இலச்சினை, விளையாட்டு வீரர்களின் உடை, சின்னங்கள் மற்றும் பாடல் ஆகியவை அறிமுகப் படுத்தப்பட்டன.
மேலும், அஸ்ஸாம் ஒலிம்பிக் மன்றமானது அம்மாநிலத்தில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ‘கிராஸ்ரூட் ஒலிம்பிக் - மிஷன் டேலண்ட் ஹன்ட்’ என்ற ஒரு திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.