இந்தியாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் தலைமையின் கீழ், 3-வது பிரிக்ஸ் போக்குவரத்து பணிக்குழு (TWG) கூட்டம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் தொடங்கியது.
இது நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான போக்குவரத்து அமைப்புகள் குறித்து உறுப்பு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ந்து வரும் உலகளாவிய போக்குவரத்து சவால்களை எதிர்கொள்ள, நிலையான போக்குவரத்து உள்கட்டமைப்பு, தூய்மையான இயக்கம், சரக்குப் போக்குவரத்து மீள்திறன் மற்றும் பன்முக இணைப்பு போன்ற முக்கிய பகுதிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப் படுகிறது.
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கருத்துரு “Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” என்பதாகும்.
இந்தியாவின் தலைமையின் கீழ் உள்ள ஆறு முக்கிய முன்னெடுப்புகளில் நிலையான உள்கட்டமைப்பு, நிலையான விமான எரிபொருள் (SAF), போக்குவரத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், நகர்ப்புற இயக்கம், மீள்திறன் கொண்ட சரக்குப் போக்குவரத்து மற்றும் இரயில்வே ஆராய்ச்சி ஒத்துழைப்பு ஆகியவை அடங்கும்.
இக்கூட்டத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) ஏற்பாடு செய்தது.
பிரிக்ஸ் நாடுகள் கூட்டாக உலக மக்கள் தொகையில் 49.5%, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40% மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் 26% ஆகியவற்றை கொண்டுள்ளன என்பதுடன் இது உலகளாவியப் போக்குவரத்து ஒத்துழைப்பில் அவற்றின் பங்கை எடுத்துக் காட்டுகிறது.