2022 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு மாநிலம் ஆனது ஒன்பது கடலோர மாவட்டங்களில் 2,900 ஹெக்டேர்களுக்கு மேலான மரங்களை நட்டு சதுப்புநிலங்களை மீட்டெடுத்து உள்ளது.
அதே நேரத்தில், குறிப்பாக திருவாரூரில் சுமார் 200 ஹெக்டேர் பரப்பிலான தரமிழந்த சதுப்புநிலங்கள் மீட்டெடுக்கப்பட்டன.
அடுத்த ஆண்டில், 720 ஹெக்டேர் பரப்பிலான புதிய தோட்டங்கள் அமைக்கப்பட்டன என்பதோடு அதனுடன் சுமார் 732 ஹெக்டேர் பரப்பின் மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப் பட்டன.
2024–25 ஆம் ஆண்டில், மேலும் கூடுதலாக சுமார் 275 ஹெக்டேர் பரப்பிலான புதிய தோட்டங்கள் பயிரிடப்பட்டது என்ற நிலையில் ஆண்டு இறுதிக்குள் மிக அதிக இலக்கு எட்டப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாநிலத்தின் 1,076 கிலோமீட்டர் கடற்கரை 14 மாவட்டங்களை உள்ளடக்கியது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தத் துறை ₹25 கோடி ஒதுக்கீட்டில் மூன்று ஆண்டு சதுப்பு நில மறுசீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது.
இப்பகுதியில் இருந்து பெரும்பாலும் காணாமல் போன சோனெரேஷியா அபெட்டாலா, சைலோகார்பஸ் கிரானேட்டம் மற்றும் கண்டேலியா கேண்டல் போன்ற சில அரிய வகை இனங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதில் சிறப்புக் கவனம் செலுத்தப் பட்டு உள்ளது.
காற்று மற்றும் அலை மீதான நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க சதுப்புநிலங்களுடன் சேர்த்து, பனை மற்றும் முந்திரி போன்ற சில மரங்களைப் பயன்படுத்தி உயிரி-கவசத் தோட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
சதுப்புநிலத் தோட்ட முயற்சிகள் தமிழ்நாடு பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றப் பதிலுக்கான பசுமையாக்கும் திட்டம் (TBGPCCR), இழப்பீட்டுக் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையம் (CAMPA), சென்னை நதி மறுசீரமைப்பு அறக்கட்டளை (CRRT) மற்றும் பிற மத்திய நிதியுதவி திட்டங்களின் ஒரு பகுதியாக மேற் கொள்ளப்பட்டன.