மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 3100 பாலியல் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிக்கும் கருவிப் பெட்டிகளை வழங்கியுள்ளது.
இது வன்புணர்வு விசாரணை கருவிப் பெட்டி எனவும் அழைக்கப்படுகிறது.
இதனைப் பயன்படுத்தி இரத்த மாதிரிகள், விந்தணு மாதிரிகள் மற்றும் இதர ஆதாரங்களை சேகரித்து உடனடியாக மருத்துவ மற்றும் சட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொள்ள முடியும்.
இந்த கருவிப் பெட்டிகளானது மத்திய அரசின் பெண்கள் நலம் சார் திட்டமான ‘நிர்பயா நிதி’யிலிருந்து அளிக்கப்பட்ட நிதியுதவியின் மூலம் வாங்கப்பட்டுள்ளன.