சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினம்
April 9 , 2019 2339 days 715 0
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி சர்வதேச வளர்ச்சி மற்றும் அமைதிக்கான விளையாட்டு தினமாக (International day of Sport for development and peace - IDSDP) அனுசரிக்கப் படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இத்தினமானது 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இத்தினமானது 1896 ஆம் ஆண்டில் ஏதென்ஸில் (கிரீஸ்) நவீன யுகத்தின் முதலாவது ஒலிம்பிக் விளையாட்டின் தொடக்கத்தை அனுசரிக்கின்றது.
சமூக மாற்றம், சமூக வளர்ச்சி மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் புரிதலை ஊக்குவிப்பதற்கான விளையாட்டுச் சக்தியின் வருடாந்திரக் கொண்டாட்டமாக IDSDP உள்ளது.