மார்ச் 31 ஆம் தேதியன்றைய நிலவரப்படி, 33 புதிய புவிசார் குறியீட்டுப் பதிவுகளை நிறைவு செய்ததன் மூலம் 2022-23 ஆம் ஆண்டில், இந்தியா இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகபட்சப் புவிசார் குறியீட்டுப் பதிவுகளை எட்டியுள்ளது.
அவற்றுள் வாரணாசியைச் சேர்ந்த இரண்டு உட்பட 10 குறியீடுகள் உத்தரப் பிரதேச மாநிலத்திற்கானவையாகும்.
புதிதாக 10 பொருட்கள் சேர்க்கப் பட்டதன் மூலம், உத்தரப் பிரதேச மாநிலம் தற்போது 45 புவிசார் குறியீடுகளைக் கொண்டுள்ளது.
இவற்றுள் 20 பொருட்கள் வாரணாசி பகுதியைச் சேர்ந்தவையாகும்.
தற்போது புவிசார் குறியீட்டுப் பதிவகமானது, 441 இந்தியத் தயாரிப்புகள் மற்றும் 34 வெளிநாட்டுத் தயாரிப்புப் பொருட்களுக்குப் புவிசார் குறியீடுகளை வழங்கியுள்ளது.
புவிசார் குறியீட்டுப் பதிவகமானது சென்னையில் அமைந்துள்ளது.