ஆசியான் உச்சி மாநாட்டின் 33வது பதிப்பானது சிங்கப்பூரின் சன்டெக் சிங்கப்பூர் சமூதாய மையத்தில் நவம்பர் 15 அன்று முடிவடைந்தது.
இந்த உச்சி மாநாட்டின் முடிவுடன் இதனுடன் தொடர்புடைய கீழ்க்காணும் மற்ற மாநாடுகளும் முடிவடைந்தன.
13 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS – East Asia Summit),
2 வது விரிவான பிராந்திய பொருளாதார உச்சி மாநாடு (RCEP – Regional Comprehensive Economic Summit) மற்றும்
21 வது ஆசியான் மற்றும் மூன்று நாடுகள் உச்சி மாநாடு
சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங் இந்த வருட உச்சி மாநாட்டின் தலைவராவார்.
லீ ஆசியானின் தலைமையை தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சான்-ஓ-சாவிடம் ஒப்படைத்தார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் 13-வது கிழக்காசிய மாநாடு, 2-வது RCEP மாநாடு மற்றும் ஆசியான்-இந்தியா ஆகிய மாநாடுகளில் கலந்து கொண்டார்.
இது பிரதமர் மோடியின் 5வது கிழக்காசிய மாநாடாகும். இந்தியாவானது 2005ஆம் ஆண்டு முதல் கிழக்காசிய மாநாட்டின் துவக்கத்திலிருந்தே பங்கேற்று வருகின்கிறது.
மேலும் பிரதமர் மோடி பின்டெக் (Fintech) மாநாட்டிலும் பார்வையாளர்களிடையே உரையாற்றினார்.
இதன் மூலம் சிங்கப்பூர் பின்டெக் விழாவில் பிரதான உரையை வழங்கிய முதல் அரசாங்கத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.
வங்கிக் கணக்குகள் இல்லாமலேயே உலகளாவிய அளவில் இரண்டு பில்லியன் மக்களை சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட APIX என்ற வங்கி தொழில்நுட்பத்தை அவர் துவங்கி வைத்தார்.