வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சமானது கடற்பாசி சாறுகள், ஹ்யூமிக் மற்றும் ஃபுல்விக் அமிலங்கள் போன்ற 34 உயிரி ஊக்கிகளை அறிவித்து உள்ளது.
அவை 1985 ஆம் ஆண்டு உரக் கட்டுப்பாட்டு ஆணையின் (FCO) கீழ் அறிவிக்கப்பட்டு உள்ளன.
உயிரி ஊக்கிகள் ஆனது, அவற்றை தனித்துவமான உரங்களின் வகுப்பு என வகைப் படுத்தி, FCO ஆணையில் 2021 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.
உயிரி ஊக்கிகள் அல்லது தாவர வளர்ச்சி ஊக்கிகள் ஆனது ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் நெருக்கடி எதிர்ப்புத் திறனை நன்கு மேம்படுத்துவதன் மூலம் தாவரங்கள் வளர உதவுகின்ற இயற்கையான அல்லது உயிரியல் தயாரிப்புகள் ஆகும்.
இவற்றில் 1968 ஆம் ஆண்டு பூச்சிக் கொல்லிகள் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகள் அல்லது தாவர வளர்ச்சிக் கட்டுப்பாட்டுக் காரணிகள் எதுவும் உள்ளடங்காது.