TNPSC Thervupettagam

36வது கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு 2025

April 27 , 2025 3 days 38 0
  • இந்தப் பரிசுகள் ஆனது ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, தீவுகள் மற்றும் தீவு நாடுகள், வட அமெரிக்கா மற்றும் தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய ஆறு புவியியல் பகுதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன.
  • இந்த விருதினைப் பெற்ற ஆப்பிரிக்க நபர் துனிசியாவைச் சேர்ந்த செமியா கர்பி என்பவர் ஆவார்.
  • இந்த விருதினைப் பெற்ற ஆசிய நபர் மங்கோலியாவினைச் சேர்ந்த பேட்முங்க் லுவ் சந்தாஷ் ஆவார்.
  • இந்த விருதினைப் பெற்ற ஐரோப்பியர் அல்பேனியாவைச் சேர்ந்த பெஸ்ஜானா குரி மற்றும் ஓல்சி நிகா ஆவர்.
  • தீவுகள் மற்றும் தீவு நாடுகள் பிரிவில் கேனரி தீவுகளைச் சேர்ந்த கார்லோஸ் மல்லோ மோலினா இந்த விருதினைப் பெற்றுள்ளார்.
  • இந்த விருதினைப் பெற்ற தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நபர் பெருவைச் சேர்ந்த மாரி லூஸ் கனக்விரி முராயாரி ஆவார்.
  • இந்த விருதினைப் பெற்ற வட அமெரிக்க நபர் அமெரிக்காவைச் சேர்ந்த லாரன் ஆலன் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்