TNPSC Thervupettagam

387வது சென்னை தினம் 2025

August 25 , 2025 3 days 27 0
  • 1639 ஆம் ஆண்டு இந்த நாளில் மதராஸ் (தற்போது சென்னை) நிறுவப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 22 ஆம் தேதியன்று சென்னை தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1639 ஆம் ஆண்டில், கிழக்கிந்திய நிறுவனம் (EIC) மதராசப் பட்டணம் என்ற மீன்பிடிக் கிராமத்தை கையகப்படுத்தி, நகரத்தின் காலனித்துவ சகாப்த மாற்றத்தைத் தொடங்கி வைத்தது.
  • சுதந்திரத்திற்குப் பிறகு, 1969 ஆம் ஆண்டில் தமிழ்நாடு என மறுபெயரிடப்படும் வரை இந்தப் பகுதி மதராஸ் மாநிலம் என்று அழைக்கப்பட்டது.
  • மதராஸ் நகரம் 1996 ஆம் ஆண்டில் சென்னை என மறுபெயரிடப்பட்டது.
  • மதராஸ் தினத்திற்கான கருத்தாக்கம் 2004 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர்கள் வின்சென்ட் டிசோசா மற்றும் சஷி நாயர் மற்றும் வரலாற்றாசிரியர் S. முத்தையா ஆகியோரால் முன்மொழியப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்