TNPSC Thervupettagam

38வது சர்வதேச வர்த்தக கண்காட்சி - IITF

November 16 , 2018 2454 days 761 0
  • இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியின் (India International Trade Fair- IITF ) 38வது பதிப்பு புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சரால் துவங்கி வைக்கப்பட்டது.
  • இந்த 38வது IITF-ன் கருத்துரு “இந்தியாவில் கிராமப்புற தொழில் நிறுவனங்கள்” என்பதாகும். இது நவம்பர் 27, 2018 அன்று நிறைவு பெறுகிறது.
  • 38வது IITF-ன் பங்காளராக ஆப்கானிஸ்தான் உள்ளது. இக்கண்காட்சிக்கு நேபாளம் முக்கிய கவன மையமாகவும் ஜார்க்கண்ட் பங்காளர் மாநிலமாகவும் உள்ளது.
  • IITF ஆனது அனைத்து வகையான தொழில்களும் தங்களது சிறப்புகளையும் சேவைகளையும் வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு வெளிப்படுத்த ஒரு தளமாக செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்