TNPSC Thervupettagam

3I/ATLAS கிரகப் பாதுகாப்புப் பயிற்சி

December 14 , 2025 2 days 25 0
  • 3I/ATLAS எனப்படும் புவிக்கு அருகிலுள்ள அமைப்பைக் கண்காணிப்பதை மையமாகக் கொண்டு, ஐரோப்பா உலகின் மிகப்பெரிய கிரகப் பாதுகாப்புப் பயிற்சியை நடத்தியது.
  • இந்தப் பயிற்சியை ஐரோப்பிய விண்வெளி முகமை (ESA), நாசா மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குறுங்கோள் எச்சரிக்கை வலையமைப்பு (UN-IAWN) ஆகியவை இணைந்து வழிநடத்தின.
  • இந்தப் பயிற்சி, குறுங்கோள்களின் அச்சுறுத்தல்களுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள், கண்காணிப்பு வலையமைப்புகள், அவசர ஒருங்கிணைப்பு மற்றும் பொதுத் தொடர்பு ஆகியவற்றைச் சோதித்தது.
  • நிலப்பரப்பில் உள்ள தொலைநோக்கிகள் மற்றும் விண்வெளி அடிப்படையிலான உணர்வுக் கருவிகள் ஆனது அதன் சுற்றுப்பாதைப் பாதையை முறைப்படுத்த 3I/ATLAS தோராயமாக வினாடிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிப்பதைக் கண்காணித்தன.
  • இதன் மாதிரியாக்கத்தில் பாதைப் பகுப்பாய்வு, மோதல்களுக்கான நிகழ்தகவு கணக்கீடுகள், விலக்கல் நடவடிக்கைகள் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்