சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் ஆனது இயற்கையான வானியற் அமைப்பாக இல்லாமல் ஒரு செயற்கைப் பொருளாக இருக்கலாம்.
தற்போது 3I/Atlas என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பொருள், வால் நட்சத்திரம் அல்லது விண்கல் போன்றவற்றிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டிருப்பதாக நம்பப் படுகிறது.
3I/Atlas என்பது 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ATLAS ஆய்வு தொலைநோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வால் நட்சத்திரம் ஆகும்.
இது சூரிய மண்டலத்தின் வழியாகப் பயணிப்பதாக உறுதி செய்யப்பட்ட மூன்றாவது விண்மீன் மண்டல அமைப்பாகும்.
முதலாவது 2017 ஆம் ஆண்டில் தென்பட்ட 1I/’Oumuamua, இரண்டாவது 2019 ஆம் ஆண்டில் தென்பட்ட 2I/Borisov ஆகும்.
பூமியிலிருந்து குறைந்தது 1.6 வானியல் அலகுகள் தொலைவில் இருக்கும் இது ஒரு அச்சுறுத்தலாக இருக்காது.