TNPSC Thervupettagam

4பி இயக்கம் - தென் கொரியா

February 4 , 2026 14 hrs 0 min 9 0
  • இணையத்தில் உள்ள இந்தியர்கள் 4பி இயக்கத்தை இந்தியாவிற்கு கொண்டு வர அணி திரள்கின்றனர்.
  • 4பி அல்லது "நான்கு வேண்டாம்" என்பது தென் கொரியாவில் தோன்றிய ஒரு தீவிர பெண்ணிய இயக்கமாகும்.
  • இந்தப் பெயர் அதன் வரையறுக்கும் நான்கு கொள்கைகளைக் குறிக்கிறது.
  • அவை அனைத்தும் கொரிய மொழிச் சொல்லான 'பி' என்பதில் தொடங்குகின்றன என்ற நிலையில் இதன் தோராயமான பொருள் 'வேண்டாம்' என்பதாகும்.
  • இந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் ஆண்களுடன் பழகுவதில்லை, ஆண்களைத் திருமணம் செய்வதில்லை, ஆண்களுடன் பாலியல் உறவு கொள்வதில்லை, அல்லது ஆண்களுடன் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில்லை.
  • இது உலகில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்திற்கும், பாலியல் உறவைத் தவிர்ப்பதற்கும் வழி வகுத்துள்ளது.
  • 4பி இயக்கம் என்பது ஒரு பாலினத்திற்கு எதிரான தனிப்பட்ட பழிவாங்கல் அல்ல, மாறாக ஏற்றத்தாழ்வுகளைத் தக்க வைக்கும் கலாச்சார நெறிமுறைகளிலிருந்து ஒரு அமைப்புரீதியான விலகல் மட்டுமே ஆகும்.
  • தென் கொரியாவில் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளி உலகில் மிக அதிகமாக, கிட்டத்தட்ட 31 சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்