சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மேற்கொள்ளும் ஒரு குறியீட்டை வெளியிட்டது.
2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டஇது, இந்தியாவின் உணவுப் பாதுகாப்புச் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளது.
மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு, மனித வளங்கள் மற்றும் நிறுவனத் தரவுகள், இணக்கம், உணவுப் பரிசோதனை உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் நுகர்வோருக்கு அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து அளவுருக்களில் மாநிலங்களின் செயல்திறனை அளவிடுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 150 மாவட்டங்கள் இந்தச் சவாலில் பங்கேற்றன.
மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2021-2022 ஆம் ஆண்டில் பெரிய மாநிலங்களின் பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அதைத் தொடர்ந்து மணிப்பூர் மற்றும் சிக்கிம் ஆகியவையும் உள்ளன.
ஒன்றியப் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர் முதலிடத்திலும், டெல்லி மற்றும் சண்டிகர் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.
திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய 'ஈட் ரைட் சேலஞ்ச்' என்ற நிகழ்ச்சியில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக விருது பெற்றன.