March 25 , 2020
1935 days
659
- உலக சுகாதார அமைப்பானது கொரானா வைரஸ் சிகிச்சைகளின் ஒரு பகுதியாக 4 மிகப்பெரிய சோதனைகளைத் தொடங்கியுள்ளது.
- இந்த 4 சோதனைகள் பின்வருமாறு.
- வைரஸ் எதிர்ப்புக் கலவையான ரெம்டெசிவிர்
- மலேரியா சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தான குளோரோகுயின் மற்றும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்.
- எச்ஐவி மருந்துகளான லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் ஆகியவற்றின் கலவை.
- லோபினாவிர் மற்றும் ரிட்டோனாவிர் கலவையுடன் இண்டர்பெரான் – பீட்டா என்ற மருந்து.
- காங்கோவில் எபோலா நோய் வெடிப்பு ஏற்பட்ட போது எபோலா நோய்த் தொற்றிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ரெம்டெசிவிர் மருந்தானது கண்டுபிடிக்கப் பட்டது.
- இந்த மருந்தானது இதர கொரானா வைரஸ்களான சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகியவற்றையும் தடுக்கும் திறன் கொண்டது என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
Post Views:
659