4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தலைக்கவசம் அவசியம்
February 19 , 2022 1248 days 552 0
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது, 4 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது தலைக் கவசம் மற்றும் பாதுகாப்பு உடை ஆகியவற்றை அணிய வேண்டும் என்ற சில புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விதிகளின்படி, 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளை ஏற்றிச் செல்லும் மோட்டார் சைக்கிள்களின் வேகமானது மணிக்கு 40 கி.மீ வேகம் என்ற வரம்பிற்குள் இருக்க வேண்டும்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, கவச உடையானது எடை குறைந்ததாகவும், நீடித்ததாகவும், நைலானால் செய்யப்பட்டதாகவும் 30 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.